மதங்களை கடந்த மனிதநேயம்: கோவிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு வழங்கும் இஸ்லாமியர்!மதங்களை கடந்த மனிதநேயம்: கோவிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு வழங்கும் இஸ்லாமியர்!

முழு ஊரடங்கு காரணமாக தினசரி கூலிகள்,  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் மனித நேயத்துடன் உணவுகளை வழங்கி வருகின்றனர்.  அத்தகைய மனித நேயர்களில் ஒருவராக உள்ளார்  செய்யது கனி.

பரமக்குடியில் இஸ்லாமியர் ஒருவர் இந்து கோவிலில் உணவுகளை தயாரித்து  ஆதரவற்றோர்களுக்கு வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா  2 அலையின் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் இன்று முதல் 14ம் தேதி வரை அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்படவுள்ளது.

தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக தினசரி கூலிகள்,  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் மனித நேயத்துடன் உணவுகளை வழங்கி வருகின்றனர்.  அத்தகைய மனித நேயர்களில் ஒருவராக உள்ளார்  செய்யது கனி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆட்டோ ஓட்டுனராக பணி புரிபவர் செய்யது கனி. தற்போது முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளியோர் உணவின்றி தவிப்பார்கள் என்பதை எண்ணிய அவர்,  எமனேஸ்வரம் பகுதியில் உள்ள உய்யவந்தாள் அம்மன் கோவிலில் உள்ள இடங்களை பயன்படுத்தி  உணவுகளை தனது சொந்த செலவில் தயாரித்து வருகிறார்.

தினமும் சாம்பார் சாதம்,தயிர்சாதம், புளி சாதம்,  கருவேப்பிலை சாதம், வெஜிடேபிள்  பிரியாணி என உணவு வகைகளை தயாரிக்கும் செய்யது கனி,  சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றது வழங்கி வருகிறார்.  கோவிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோர்களுக்கு வழங்கி வரும் செய்யது கனியின் சேவைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments