கீரனூர் அருகே களமாவூர் ரயில்வே மேம்பாலம் நள்ளிரவில் திறப்பு!திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் சாலையின் இருபுறமும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதன் காரணமாக மேம்பாலம் அருகே செல்லும் மாற்றுப்பாதை வழியாக 2 கிலோ மீட்டர் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன. அந்தப் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சாலையின் இருபுறமும் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது. 

இதனால், அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சாரை, சாரையாக செல்லத் தொடங்கின. இந்த மேம்பாலம் திடீரென திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மாற்றுப் பாதையை செப்பனிட ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்தப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தரப்பில் கேட்டபோது, ரெயில்வே மேம்பாலத்தை நாங்கள் திறக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் சாலையை அடைக்கச் சொன்னால் மீண்டும் அடைத்து விடுவோம் எனக் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments