செந்தலையில் ஊருக்குள் செல்லும் பிரதான சாலைகள் மூடல்


செந்தலையில் ஊருக்குள் செல்லும் பிரதான சாலைகள் ஊராட்சி நிர்வாகத்தால் அடைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலையில்

பிரதான சாலையான பேருந்து நிறுத்த சாலை , மணல்மேடு சாலை, கிழவிக்கடை சாலை ஆகிய சாலைகளில் அடைப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் பரவுவதால் முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஊருக்குள் கொரோனா பரவாமல் தடுக்கவும் வெளியூர் மக்கள், மற்றும் வாகனங்கள் வருவதை தடுக்கும் நோக்கத்துடன் சாலை மூடப்பட்டதாகவும், தண்ணீர் வாகனம், காய் -கனிகள் உள்பட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் ஊருக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments