உலமாக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி கோரிக்கை


உலமாக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி கோரிக்கை!

கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பையும்  தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது.

இவர்களில் உலமாக்கள், மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும், அடங்குவர் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள்  மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை இத்தருணத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான  ஏற்பாடுகளை  செய்தால்,
சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  பயனடைவர்.

இதை கனிவுடன்  பரீசீலிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

04.06.2021

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments