கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோ.ஜின்னா அவர்களுக்கு "GPM என்றும் உதவும் கரங்கள்" கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பாராட்டுக்கள்!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நட்டாணிபுரசகுடி ஊராட்சியை சேர்ந்த கடற்கரையோர கிராமம் தான் கோபாலப்பட்டிணம்.

இந்த கிராமத்தில் கடற்கரையிலும், கடற்கரை மணலிலும் தவளாத குழந்தைகளே கிடையாது. அவ்வளவு அழகு நிறைந்த இந்த கடற்கரையின் ஓரத்தில் மரங்களை நட்டு பராமரித்தும், கடற்கரையை தனிமனிதனாக தூய்மையோடும், பசுமையோடும் பாதுகாத்து வரும் மனிதர் தான் சகோ.ஜின்னா அவர்கள். இவர் கடல் ஓரத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். ஓய்வெடுக்கவும் குடும்பத்தோடு கடற்கரையை காண வருகை தருவோர்கள் இழைப்பார நிழற்குடைகளாக மரங்களை வளர்த்து வருகிறார்.

ஒரு மரத்தை நட்டு அதனை பராமரித்து வருபவர் யாரேனும் அந்த மரத்தின் நிழலில் நின்று பயனடைவோராயின் அதற்கான நன்மையை அந்த மரத்தை நட்டு பராமரித்தவர் அறுவடை செய்கிறார்.

அந்த வகையில் கடற்கரையோரம் வளர்ந்து நிற்கும் ஏராளமான அதிகமாக காற்று தரும் மரங்களை பராமரித்தும், தூய்மையாகவும் பாதுகாத்துவரும் சகோ.ஜின்னா அவர்களுக்கு GPM என்றும் உதவும்கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் உள்ளம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசர இரத்த தான உதவிக்கு GPM என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தொலைபேசி 8681815683, 9585117670 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments