பொதுமக்கள் கேள்வி: கோபாலப்பட்டிணத்தில் கழிவுநீர் கால்வாய் பணியை சரிவர செய்து முடிக்குமா ஊராட்சி நிர்வாகம்!கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் வடிகால் வாய்க்காலை ஊராட்சி மன்ற நிர்வாகம் சரியான முறையில் சரி செய்து தருமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் (பெரிய பள்ளி-கடற்கரை சாலை) பல ஆண்டுகளுக்கு முன்பு முண்டு கல்லில் சிமெண்ட் கொண்டு வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு இன்றி இருந்ததால் கழிவுநீர் செல்ல முடியாத நிலையில் அடைப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் சூழ்ந்தது. இதனால் அந்த மழைநீரை வெளியேற்ற ஊராட்சி மன்ற நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக அந்த கழிவுநீர் செல்ல முடியாத வாய்க்காலை JCB இயந்திரம் மூலம் இடித்து அகற்றி மழைநீரை வெளியேற்றினர். 

இந்நிலையில் ஏற்கனவே இருந்த வாய்க்காலை இடித்ததின் காரணமாக அந்த பகுதியில் வீட்டின் ஓரங்களில் பெரிய பள்ளம் உருவானது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அவதிக்குள்ளானர். இதனிடையில் அந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தூம்பு இறக்கி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பில் தூம்பு அமைக்கும் பணி நடைபெற்றது.ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஒரு தூம்பு அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக அந்த பகுதி முழுவதும் தூம்பு அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இவ்வாறாக அமைப்பதன் மூலம் சிறு குழந்தைகள் விளையாடும் பொழுது பள்ளத்தில் விழுந்து அடிபடுவதும், அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள்   விபத்தில் சிக்குவதும் மற்றும் வருகிற காலங்கள் மழைக்காலங்களாக இருப்பதால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி அதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவிக்கின்றனர். எனவே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தூம்பு அமைக்கும் பணியை முழுமையாக செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோபாலப்பட்டிணம் வரலாற்றில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழிவுநீர் வாய்க்காலை சரி செய்து தர வேண்டி கடந்த 19.01.2021 அன்று அப்பகுதி மக்கள் சாலையின் குறுக்கே இரும்பு குழாய் மற்றும் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments