தடைக்காலம் முடிந்தும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள்!



ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன்(திங்கட்கிழமை) முடிவடைந்தது. ஆகவே, இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் மீன்களை வாங்கிச் செல்வதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். 

இதனால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்படும். ஆகவே, வருகிற 30-ந் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் 29-ந் தேதி வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments