கட்டுமாவடி குழந்தை கடத்தல் வழக்கில் திருநங்கை கைது!மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி பகுதியை சேர்ந்த கருப்பையா-சரண்யா தம்பதியின் மகள் பார்வதி (வயது 9). இந்தநிலையில் சரண்யாவுக்கு திருவப்பவாடி பகுதியை சேர்ந்த திருநங்கை காவியா (28) என்பவர் அறிமுகம் ஆனார். 

இதைத்தொடர்ந்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று சரண்யாவின் வீட்டிற்கு வந்த காவியா குழந்தையை கட்டுமாவடி கடைவீதிக்கு தூக்கி செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அதன்பின் நீண்டநேரமாகியும் காவியா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரண்யா கணவரை அழைத்து சென்று தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. காவியா குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து சரண்யா மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் பதுங்கியிருந்த காவியாவை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments