புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான உதவி மைய தொலைபேசி எண் அறிமுகம்புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான “பெண்கள் உதவி மையம்” உதவி தொலைபேசி எண் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பெண்கள் உதவி மைய தொலைபேசி எண்களான 181, 112 ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். காணொலியில் கூடுதல் டி.ஜி.பி. (சீருடை பணியாளர் தேர்வாணையம்) சீமா அகர்வால், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஜ.ஜி. ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 போலீஸ் நிலையங்களில் இருந்து கலந்துகொண்ட 40 பெண் போலீசாருக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. உளவியல் நிபுணர் கார்த்திக் தேவநாயகம், குழந்தைகள் நல குழுமம் ஸ்டெல்லா புஷ்பராணி, நிர்மலா ராணி, மகளிர் திட்ட அதிகாரி ரேவதி, குழந்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரேணுகா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பு நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments