அறந்தாங்கி அம்மா உணவகத்துக்கு முதல் மாத ஊதியத்திலிருந்து ஒரு லட்சம் வழங்கிய எம்எல்ஏ

அறந்தாங்கி அம்மா உணவகத்துக்கு முதல் மாத ஊதியத்திலிருந்து ஒரு லட்சம் வழங்கிய எம்எல்ஏ.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அறந்தாங்கி அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் வகையில், தனது முதல் மாத ஊதியத்திலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளாா் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமச்சந்திரன்.

அந்தாங்கி நகராட்சி மூலம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை மற்றும் மதியம் தலா 100 பேருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோருக்கு அம்மா உணவகம் பெரும் வரமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமச்சந்திரன், தனது முதல் மாத ஊதியத்திலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளாா்.

இந்தத் தொகையிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் ஒரு மாதக் காலத்துக்கு அனைத்துப் பொதுமக்களுக்கும் விலையின்றி உணவு வழங்கப்படவுள்ளது.

இதே அறந்தாங்கி அம்மா உணவகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கி, ஒரு வாரக் காலத்துக்கு விலையின்றி உணவு வழங்கச் செய்தாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments