புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம்!புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் சேவை தொடங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடையிருந்த நிலையில் வருகிற 5-ந் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்களை இயக்க புதுக்கோட்டை உள்பட 23 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை காலை முதல் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி 139 நகர பஸ்களும், 245 புறநகர் பஸ்களும் தயார் நிலையில் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் நேற்று கிருமி நாசினி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாக தூய்மை பணி ஊழியர்கள் பஸ்களில் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். இதேபோல பஸ்களில் டயர்களில் காற்று சரிபார்த்தல், உதிரிபாகங்கள் சரிபார்த்தல் உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

பஸ்களை இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் கடைகள் அகற்றப்படும். மார்க்கெட்டிலே மீண்டும் வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள்.

தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணிகள் வசதிக்காக மாவட்ட எல்லைப்பகுதி வரை பஸ்கள் இயக்கப்படலாம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments