சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து கோபாலப்பட்டிணத்தில் தமுமுகவினர் இனையவழி போராட்டம்!



சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய  அரசை கண்டித்து கோபாலப்பட்டிணத்தில் தமுமுகவினர் இனையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் ஜூன் 02 இன்று புதன்கிழமை CAA-NRC-NPR-ரை ரத்து செய்ய கோரியும், குடியுரிமை சட்டத்தின் கொடிய சதிகளை கொரோனா காலகட்டத்திலும் நிறைவேற்ற முயலும் பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பழைய காலனியில் காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை கண்டண போராட்டம் நடைபெற்றது.

சமூக இடைவெளியுடன் முக கவசம் அனிந்தும் கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் முகமது மசூது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் அசாருதீன், முபாரக் ஒன்றிய நிர்வாகிகள் அசாருதீன், அபுதாஹிர், கிளை நிர்வாகிகள் ஹிதயாத்துல்லாஹ், முஸ்தாக், ஆசிக் உட்பட பல நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

NO CAA - NO NRC - NO NPR

அரசியலமைப்புக்கு எதிரான CAA சட்டத்தை அமல்படுத்தாதே, குடியுரிமை விடயத்தில் பாகுபாடு பார்க்காதே, கொடும் தொற்று காலத்தில் கொடிய CAA சட்டம் தேவையா? மக்களை திசை திருப்ப இப்படி ஒரு வேலையா? அனுமதிக்கமாட்டோம்.. அனுமதிக்கமாட்டோம் CAA - NRC - NPR சட்டத்தை அனுமதிக்கமாட்டோம்.









தகவல்:
தமுமுக ஊடக அணி,
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments