வாட்ஸ்அப் கன்ஃபர்ம் செய்த மிக முக்கிய அப்டேட்- என்ன தெரியுமா?


வாட்ஸ்அப்பை மல்டி டிவைசில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ஆப்ஷனை வழங்க வேண்டும் என பயனாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

வாட்ஸ்அப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மல்டி டிவைஸ் சப்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், வெப் மற்றும் டெஸ்க்டாப்களில் முதன்முதலாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் முன்னணி மெசெஞ்சராக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பயன்படுத்தும் சேட்பாக்ஸாக இருக்கும் வாட்ஸ்அப்பில், அவ்வப்போது வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப்பை மல்டி டிவைசில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ஆப்ஷனை வழங்க வேண்டும் என பயனாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அண்மையில் பதில் அளித்த வாட்ஸ்அப் நிர்வாக இயக்குநர் காத்கார்ட் (Cathcart) மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் ஆகியோர் மல்டி டிவைசில் வாட்ஸ்அப்பை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் அம்சம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் அப்டேட்களை முன்கூட்டியே தெரிவிக்கும் WABetainfo தளம் வெளியிட்டுள்ள தகவலில், வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சமானது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளது.

பீட்டா வெர்ஷனில் வெளியாகும் இந்த அம்சம் முதலில் டெஸ்க்டாப் மற்றும் வெப்களில் மட்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. அதன்பிறகு ஸ்மார்ட்போன்களுக்கான அம்சத்தை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. முதலில் அறிமுகப்படுத்தப்படும் இந்த அம்சத்தில் இருக்கும் குறைபாடுகளை களைவதற்கான ஏற்பாடுகளை வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்டிருப்பதாகவும், மெயின் டிவைஸில் இண்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்றாலும் வாட்ஸ்அப்பை மல்டி டிவைஸ் சப்போர்ட்டில் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.

வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யாமல் பழைய வெர்ஷனில் பயன்படுத்துபவர்களுக்கு மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் கிடைக்காது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் நடைமுறைக்கு வந்தால், வாட்ஸ்அப்பின் முதன்மை செயலியை பயன்படுத்தாமல் கணினி, லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றில் வாட்ஸ்அப்- ஐ ஒபன் செய்யலாம்.

தற்போது, லேப்டாப் அல்லது டேப்லெட்டில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்ய வேண்டும் என்றால் வாட்ஸ்அப் வெப் கனக்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்அப் செயலி இணைக்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி டெஸ்க்டாப் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்குரிய டெக்னிக்கல் சப்போர்ட் இன்னும் மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் WABetainfo தளம் குறிப்பிட்டுள்ளது. பயனாளர்கள் கொடுக்கும் ரிவ்யூவிற்கு பிறகு அதனை மேம்படுத்தவும் வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments