கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 24/06/2021 மின்தடை!புதுக்கோட்டை துணை மின் நிலையம் மற்றும் வெள்ளாளவிடுதி துணை மின் நிலையம் பகுதிகளில் மின்பாதை மற்றும் மின்னூட்டி அமைப்பதற்கான முக்கியமான கட்டமைப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி அறந்தாங்கி நகர், நாகுடி, கொடிக்குளம், அமரடக்கி, ஆவுடையார்கோவில் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், மணமேல்குடி, அமரடக்கி, கரூர், திருப்புனவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24.06.2021 (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments