கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய அழைப்பு! புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,300 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 6,300 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் காப்பீடு மேற்கொள்ள 2 சதவீத பிரீமியத் தொகையில் வறுமைகோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்போருக்கு 70 சதவீதம் மானியமும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும். 2½ ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும்.

அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்திற்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம். 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments