கோபாலப்பட்டிணம் ''மரண அறிவிப்பு'' செய்திகள் பற்றி GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு!GPM மீடியாவில் பதிவு செய்யப்படும் பதிவுகளில் மிக முக்கியமான ஒன்று மரண அறிவிப்பு செய்தி.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பலர் தங்களுடைய பொருளாதார தேவை காரணமாக வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் ஏற்படும் இறப்பு செய்திகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்காக மரணித்தவரின் பெயர், குடும்ப விபரம், தெருப் பெயர் மற்றும் அடக்க நேரம் பதியப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை கிராம பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மரண நிகழ்வில் குறைந்த பட்ச நபர்களே கலந்து கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே மரணித்தவரின் அடக்க நேரம் GPM மீடியாவில் வெளியிடப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த சூழலில் GPM மீடியாவில் பதிவு செய்யப்படும் மரண செய்திகளில் மரணித்தவரின் பெயர், குடும்ப விபரம் மற்றும் தெரு பெயர் போன்றவை மட்டுமே அறிவிக்கப்படும். 

கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள நடைமுறைகளில் தளர்வு பற்றி மறுஅறிவிப்பு வரும் வரை அடக்க நேரம் பற்றிய தகவல் அறிவிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன்...
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments