அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்: அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எம்எல்ஏ கோரிக்கை!
அறந்தாங்கியை மாவட்ட தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எம்எல்ஏ கோரிக்கை.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் வெளியிடுள்ள அறிக்கையில் :

தமிழகத்தின் புதிய முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அருமை அண்ணன் மாண்புமிகு தளபதியார் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் ஆகியனவற்றை மனதில் கொண்டு புது மாவட்டங்கள் சில உருவாக்கப்பட போவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக செய்திகள் வெளி வருகின்றன.  

அறந்தாங்கியை மாவட்ட தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற இப்பகுதி மக்களின் கோரிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது குறித்து சட்டமன்றத்திலும் தமிழக முதல்வர் அருமை அண்ணன் மாண்புமிகு தளபதியார் அவர்களிடத்திலும்  இக் கோரிக்கையை எடுத்துரைப்பேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments