புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் வன அலுவலகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தல்!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பசுமைப்பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டத்தினை சீறிய முறையில் செயல்படுத்த ஏதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்பினால் தங்களின் பெயர்,  கைப்பேசி எண், ஆதார் எண்,  நில அளவை எண் மற்றும் நிலப்பரப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளின் வகைகள் மற்றும் எண்ணிக்கை குறித்து அருகில் உள்ள வனச்சரக அலுவலரை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments