கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாத் நிர்வாகம் தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று புதிய ஜமாத் நிர்வாகம் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று 9.07.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில வருடங்களாக ஜமாத் நிர்வாகம் பல்வேறு காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது.இதனால் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமலும், ஊரினுடைய வளர்ச்சியும் மிகவும் தடைப்பட்டிருந்தது.மேலும் பல்வேறு தரப்பினரும் முன்னாள் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஒரே தலைமையின் கீழ் இயங்கும் ஒரு ஜமாத்தை தேர்ந்தெடுப்பதற்கான பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் எந்த தீர்வும் எட்டப்படாமல் இருந்து வந்தது. 

இதனையடுத்து பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்த ஜமாத் நிர்வாக தேர்வினை, இந்த வருட ஹஜ் பெருநாளைக்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிணைந்து ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் மிக தீவிரமாக இறங்கினர்.
 
இந்நிலையில் அதன் பலனாக இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து முன்னாள் முக்கிய நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு நேற்று (09.07/2021) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
    
இதில் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது:

1.ஐந்து பெரியவர்கள், ஐந்து இளைஞர்கள் என சேர்த்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

2.இக்குழு வருகிற 16.07.2021 (ஜும்ஆ-விற்கு) முன்பாக, இதற்கு முன்பு நிர்வாகத்தில் இல்லாத புதிய நபர்களை (தகுதி வாய்ந்த நிர்வாகிகளை) அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும்.

3.இக்குழுவிற்கு ஊரிலுள்ள அனைத்து குடிமக்களும் தாங்கள் விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களை நிர்வாகியாக பரிசீலிக்கலாம். (முதன் முறையாக ஊரில் உள்ள அனைத்து நபர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.)

4.இக்குழு தங்களுக்கு வரும் அனைத்து நபர்களுடைய பெயரையும் (நிர்வாகியாக தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான) விவாதத்திற்கு உட்படுத்தும். அது அல்லாது வேறு சிலரையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் பணியை மேற்கொள்ளும்.
 
5.மேலும் குறிப்பிட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களிடம் நேரடியாக சென்று அவர்களின் ஒப்புதலை பெற முயற்சி செய்யும்.
 
6.இறுதியாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகிற 16.07.2021 ஜும்ஆ தொழுகைக்கு பிறகு சபை முன் நிர்வாகிகளின் பட்டியலை அறிமுகப்படுத்தும். (எந்தப் பொறுப்பும் வழங்கப்படாது, பெயர் பட்டியல் மட்டும் அறிமுகப்படுத்தப்படும்.)

அதற்குப் பிறகு ஊர் பொதுமக்கள் சேர்ந்து தங்களுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இதர நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள் என அனைத்து நபர்களாலும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. 

பத்து பேர் கொண்ட குழு  நபர்கள் விபரம்:

பெரியவர்கள்:
  1. SRM.சேக் பரீது
  2. மு.மு பசீர் அலி
  3. V.M.A அகமது உமர் 
  4. சித்திக் அலி
  5. முகமது ஹூசைன்
இளைஞர்கள்:
  1. அசாருதீன் (எ) உமர்
  2. முகமது யாசீன்
  3. முகமது ஆசிக்
  4. ரமலான்  கான்
  5. ரகுமான் கான் 
ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மக்களும் அமைதியான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments