மணல்மேல்குடி காவல்நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட மணமேல்குடி காவல் நிலையத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
மாவட்ட கண்காணிப்பாளர் மணமேல்குடி காவல் நிலையம் வருகைதந்தவுடன்; காவல் நிலையம் சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்தும் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆளிநர்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, நிறை குறைகளை கேட்டறிகிறார்களா என்றும், பொதுமக்கள் காவல்நிலையத்தை அணுகுவதில் எந்த சிரமமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.


அப்போது, அறந்தாங்கி வட்டத்திற்குட்பட்ட அத்தானி தெற்கு பகுதியை சேர்ந்த பிச்சை மகன் தங்கவேல் (47), மணல்மேல்குடி வட்டத்திற்குட்பட்ட கரகத்திகோட்டை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துகுமார் (42) ஆகியோர் மதுபானம் விற்றதற்காக தனிப்படையினர் பிடித்து மணல்மேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
மேலும் கடற்கரையோர கிராமமான ஆதி பட்டினத்தில் கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சா வாங்கி வந்த ஆதிபட்டினத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் தெற்கு புதுக்குடியைச் சேர்ந்த சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.

மேற்கண்ட கஞ்சா வாங்கி வந்த நபரை பிடித்ததில் ஒரு பாக்கெட் கஞ்சா வைத்திருந்தார். அதை எங்கிருந்து வாங்கினார் என்று விசாரித்ததில் தெற்கு புது குடியைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் வாங்கியதாக சொன்ன தகவலின் பேரில் மேற்கண்ட நபரின் வீட்டை சென்று சோதனை செய்ததில் டீ விற்கும் கேனில் சுமார் 250 கிராம் (22 பாக்கெட்டுகள்) மதிப்புள்ள கஞ்சா வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது
மேற்படி சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினரையும், மணல்மேல்குடி காவல் நிலையத்தாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகு பாராட்டி சென்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள நிறைகுறைகளை அறிந்து, அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத் தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments