கோபாலப்பட்டிணத்தில் சிறந்த நிர்வாகிகளை தேர்வு செய்ய GPM HEART BEATS-ன் சில ஆலோசனை!!கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாஅத் நிர்வாகத்தை தேர்வு செய்யும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட குழுவை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

கோபாலப்பட்டிணம் புதிய ஜமாஅத் நிர்வாகத்தை தேர்வு செய்யும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கி உள்ள நிலையில், நல்ல நிர்வாகம் அமைய வேண்டும், நல்ல ஜமாத் தலைவரை அடையாளம் கண்டு தேர்வு செய்திட வேண்டும் என ஊர் மக்களோடு GPM HEART BEATS குழு உறுப்பினராகிய நாங்களும் முயற்சியும், துவா செய்கின்றோம்.

ஜமாத் நிர்வாகிகளின் தகுதிகள் சிலவற்றை கோரிக்கைகளாக முன் வைக்கிறோம். 
 1. சுய சம்மதம்.
 2. இறை அச்சத்துடன் ஐந்து வேளை தொழுகை.
 3. முந்தைய ஜமாஅத் நிர்வாகத்தில் பங்கு கொண்டவராக இருத்தல் கூடாது. 
 4. மது, மாது, சூது போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் இருத்தல். 
 5. விவாகரத்து மற்றும் சொத்து பிரச்சினைகளில் ஷரியத் சட்டங்கள் பற்றிய தெளிவான புரிதல் இருத்தல் மற்றும் நீதமாக செயல்பட வேண்டும். 
 6. சட்ட திட்டங்களுக்கு கீழ்படிதல் மற்றும் ஆலோசனை போன்ற நற்குணங்கள் இருத்தல் வேண்டும். 
 7. நமதூரின் முந்தையக்கால மாண்புகள் அறிந்தவராக இருத்தல் வேண்டும்.
 8. யாருடைய விருப்பமும், வெறுப்புமின்றி, பயம், பாரபட்சமின்றி நீதியை வழங்கிட வேண்டும். 
 9. ஊரின் மாண்புகளை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 10. வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என பாகுபாடின்றி தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் இருத்தல் வேண்டும்.
 11. தனது தனிப்பட்ட கொள்கைகளை மக்களிடம் புகுத்தாமல் இருத்தல் வேண்டும்.
 12. மக்களால் குறையோ, குற்றமோ கூறப்பட்டால் அதை உள்வாங்கி கொண்டு அதற்கான விளக்கத்தை பொதுவெளியில் கொடுப்பவராக இருத்தல் வேண்டும். 
 13. நமதூர் மக்களை இம்மையிலும், மறுமையிலும் வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்பவராக இருத்தல் வேண்டும்.
 14. பஞ்சாயத்தின் போது பெண்கள் விடயத்தில் கண்ணியத்தை பேண வேண்டும்.எக்காரணம் கொண்டும் தனிநபராக ஒருவர் விசாரணை கூடவே கூடாது.
தலைமை & நிர்வாகம் பற்றி இஸ்லாம்

நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் நிழலை பெறக்கூடிய வாய்ப்பை பெற்றவர் தான் நீதியை நிலை நாட்டும் அரசர் (ஜமாஅத் தலைவர்)

முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.  (புகாரி, முஸ்லிம்)

மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்.  (புகாரி, முஸ்லிம்)
GPM HEART BEATS  உறுப்பினர்கள்:

1) முஹம்மது இபுராகிம் S/O சாகுல் ஹமீது
Whats +917502251234

2) அபுபக்கர் சித்திக் S/O முகமது ஆரிப்
Whats +97466874701

3) முகமது முனோபர் S/O KMSJ.சேக் நூர்தீன்
Whats +919789137705

4) ஜகுபர் அலி S/O நெய்னா முகம்மது
Whats +918925330122

5) காஜா கலந்தர் S/O அப்துல் காதர்
Whats +966593648861

6) முகம்மது நூருல்லா S/O KNL.அகமது ஜலாலுதீன்
Whats +966530414612

7) முகம்மது ராவுத்தர் S/O அப்துல் காதர்
Whats +917708741786

தகவல்: முகம்மது ராவுத்தர், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

1 Comments

 1. இந்த குழுவில் சில அரசியல் கட்சி அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள் மேலே உள்ள ஆலோசனைக்கும் அவர்களுக்கும் மிகப்பெரிய முரண் உள்ளது

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.