‘புதுகையில் 2.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- அமைச்சா் எஸ். ரகுபதி தகவல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 2,62,230 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நற்சாந்துப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பாரவையிட்ட அவா் மேலும் கூறியது:


புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றாலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 2,62,230 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 37,911 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3,00,141 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா் ரகுபதி.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பா. கலைவாணி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் அழகு, ஊராட்சி மன்றத் தலைவா் சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments