அறந்தாங்கி வருவாய் மாவட்டம் கோரி கையெழுத்து இயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஆலங்குடி, தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய அறந்தாங்கி வருவாய் மாவட்டம் உருவாக்கித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறந்தாங்கியில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு, வா்த்தகா் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் தங்கதுரை கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், நகரச் செயலா் தங்கராஜ், காங்கிரஸ் வீராச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி கிரீன் முகம்மது ,மனிதநேய ஜனநாயகக் கட்சி முபாரக், தமாகா முத்துக்குமாரசாமி, இந்திய கம்யூ. கட்சி ராஜேந்திரன், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி தலைவா் சேக் சுல்தான், காங்கிரஸ் பூங்குன்றன், அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு செயலா் முகமது ஹாரிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கையெழுத்திட்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments