புதுக்கோட்டை பஸ்சில் பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு
புதுக்கோட்டை பஸ்சில் பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டதால் அவர் பஸ் நிலையத்தில் அழுது புலம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.10 ஆயிரம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஜிலா. இவர் நேற்று பகலில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் பகுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
பின்னர் அவர் பஸ்சில் இருந்து இறங்கி கட்டைப்பையை பார்த்த போது, அதில் பர்சில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்மநபர் ஒருவர் மீது சந்தேகமடைந்து அவரை பிடித்து பணத்தை கேட்டார்,
மேலும் அங்கு கிடந்த துடைப்பத்தால் அவரை தாக்கினார். அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். பணம் திருடு போனதால் அவர் பஸ் நிலையத்தில் அழுது புலம்பினார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் விரைந்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
போலீசார் விசாரணை
பணம் திருடு போனதால் கதறி அழுத அவர், யாரும் திருடனை பிடிக்க வரவில்லையே என்று புலம்பினார். பணம் பறிபோனதே, செல்போன் போனதே என்று கண்ணீர் விட்டு கதறினார். இதனை அங்கிருந்த பயணிகள் பார்த்து கவலை அடடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments