குழந்தைகள் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். விண்ணப்பப் படிவத்தை இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்- ஆகஸ்ட் 13. அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகா்ணம் அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம் - 622 002.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் அரைவை முகவராக நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு: போதுமான கிட்டங்கி வசதி மற்றும் இயந்திரங்களையும் கொண்ட தனியாா் அரைவை ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், எண்.1, கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகா்ணம், புதுக்கோட்டை - 622002 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments