அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று (ஜூலை 05) முதல் புதிய விதிமுறைகள்






  
அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது

அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அபுதாபிக்கு விமானங்கள் மூலம் வரும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு விசா பெற்ற வெளிநாட்டவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்ட பசுமை நாடுகள் பட்டியலில் இருந்து வருகை புரியும் தடுப்பூசிபோட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனையை விமான நிலையத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தனிமைப்படுத்துதலுக்கு உட்பட தேவையில்லை. அதேபோல வருகை புரிந்த நாளில் இருந்து 6-வது மற்றும் 12-வது நாட்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மற்ற நாடுகளில் இருந்து (பசுமை பட்டியலில் இல்லாத நாடுகள்) வருகை தரும் பயணிகள் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டு 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் 6-வது நாள் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த விதிமுறைகள் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பு விசா பெற்ற வெளிநாட்டவர் என அனைவருக்கும் பொருந்தும்.

இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பசுமை பட்டியல் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று இருந்தாலும் வருகை புரிந்த அன்று கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல அவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்பட தேவையில்லை. இதில் வருகை புரிந்த 6-வது மற்றும் 12-வது நாட்களில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிற நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வருகை புரிந்த நாளன்று பி.சி.ஆர். பரிசோதனையும், அதன் பிறகு 12 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்பட வேண்டும். இதில் 11-வது நாள் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த விதிமுறைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments