பொறியியல் படிப்பு: செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட்-18ல் துவக்கம் -அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு,மூன்று மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 18 ம் தேதி முதல் நவம்பர் 30 வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 2-ல் செய்முறைத் தேர்வுகளையும், டிசம்பர் 13-ல் செமஸ்டர் தேர்வுகளையும் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments