புதுக்கோட்டையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபர்; குணப்படுத்திய புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்!!புதுக்கோட்டையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் குணப்படுத்தினர்.

புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது21). இவருக்கு கடந்த மாதம் 24-ந் தேதி தலைசுற்றியது, அதைத்தொடர்ந்து இடது கை மற்றும் கால் செயலிழந்திருப்பதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரை மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. பின் அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்த்தில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டு 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்ததால் மூளையில் ரத்த உறைவு அடைப்பை நீக்கும் சிறப்பு மருந்து செலுத்தப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் நோயாளியின் கை கால் செயலிழப்பு முழுமையாக குணமடைந்து, யாருடைய உதவியும் இல்லாமல் தானாக எழுந்து நடக்கும் அளவிற்கு குணமடைந்தார். சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களை மருத்துக்கல்லூரி முதல்வர் பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments