ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்கின நோய்கள் குறித்து விழிப்புணர்வு!



ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று உலக ஜூனோசிஸ் தினம் (விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தினம்) கொண்டாடப்பட்டது.

ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு லெப்டோஸ் பைரோசிஸ், ஸ்கரப்டைபஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. விலங்குகள் மூலம் பரவும் நோய்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உறுதி மொழிகளை ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமையேற்க, முதுகலை வரலாற்று ஆசிரியர் மதியழகன் உறுதிமொழிகளை வாசித்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சரவணன், கந்தவேல், செந்தில், ரூபன்விஜய், திருவருட்செல்வன் மற்றும் மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments