ஜூலை 22-ம் தேதி முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்






வரும் 22-ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஏற்கெனவே இணையதளத்தில் உள்ளன. அதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவது சிரமமான வேலை அல்ல. வரும் 22-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஏற்கெனவே தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments