விராலிமலை அருகே பரபரப்பு: ஒரே நாளில் 6 பேரை கடித்த வெறிநாய்!விராலிமலை அருகே ஒரே நாளில் 6 பேரை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை அருகே மீனவேலி கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த நாய் ஒன்று திடீரென அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் நல்லு (வயது 30), அழகர் மகன் பசுபதி (4) ஆகியோரை கடித்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

அதனை தொடர்ந்து சித்திரம்பட்டி கிராமத்திற்கு சென்ற அந்த நாய் அப்பகுதியைசேர்ந்த அண்ணாமலை என்பவரது வீட்டுக்குள் புகுந்து அவரது மகள் நேத்ரா (14) என்பவரை கடித்தது. அவர்கள் விரட்டி விட்டதில் சாலைக்கு வந்த நாய் முத்தையன் மகன்ராமு (53), வேலாயுதம் மனைவி பத்மாதேவி (42) ஏழுமலை மனைவி சுதா (30) ஆகியோரையும் கடித்தது.

இதில் காயம் அடைந்த 6 பேரும் மணப்பாறை மற்றும் கொடும்பாளூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் பொதுமக்கள் விரட்டியதில் அந்த நாய் அன்னதானப்பட்டி கிராமத்துக்கு சென்று தனபால் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டையும் கடித்துவிட்டு ஓடிவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த நாயை உடனடியாக பிடிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments