கொரோனா தடுப்பூசி சான்றிதழில் விவரங்கள் தவறா இருக்கா? திருத்துவது எப்படி? விளக்கம்!தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு செயலிகளின் வழியாக பதிவிறக்கம் செய்யும் சான்றிதழ்களில் பிழைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனையும் சரி செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஒருமுறை நீங்கள் தடுப்பூசி செலுத்துக்கொண்டால், மத்திய அரசு சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் பெயர், ஆதார் எண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதி, தடுப்பூசியின் பெயர், அடுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டிய தேதி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட இடம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோவின் (CoWIN), உமாங் (UMANG) டிஜி லாக்கர் (Digi-locker) ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆகிய செயலிகளின் வழியாக, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு செயலிகளின் வழியாக பதிவிறக்கம் செய்யும் சான்றிதழ்களில் பிழைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனையும் சரி செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரோக்கிய சேது செயலியின் டிவிட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பில், பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றில் பிழை இருந்தால் CoWIN இணையதளத்துக்கு சென்று அதனை தாமாகவே சரி செய்து கொள்ளலாம். பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகிய மூன்றில் பிழை இருந்தால் மட்டுமே திருத்திக் கொள்ள முடியும். மற்ற தகவல்களை திருத்துவதற்கு அனுமதி கிடையாது. மேலும், இந்த திருத்தங்களை ஒரே ஒரு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

முதலில், CoWIN தளத்தில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். https://www.cowin.gov.in/ என்ற இணையதள பக்கத்துக்கு சென்று In/Register ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவிட வேண்டும். இதனை நீங்கள் செய்தவுடன், நீங்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால், உங்கள் பெயருக்கு கீழே சான்றிதழ் இருக்கும். டவுன்லோடு பட்டனை கிளிக் செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தடுப்பூசி பிழையை திருத்துவது எப்படி?

https://www.cowin.gov.in/ கோவின் இணையதளத்துக்கு சென்று In/Register ஐகானை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டு அக்கவுண்டுக்குள் நுழைய வேண்டும். Account Details section - ல் இருக்கும் Raise an issue பட்டனை கிளிக் செய்ய வேண்டும். Choose the member name ஆப்சனில் உங்களின் பெயரை தேர்வு செய்த பிறகு Correction in the certificate என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில், பெயர் (Name), பாலினம் (Gender), பிறந்த தேதி (Year of birth) ஆகிய மூன்று ஆப்சன்கள் இருக்கும். பிழையை சரி செய்ய வேண்டியதை தேர்வு செய்து திருத்துங்கள். ஒரே ஒருமுறை மட்டுமே திருத்திக்கொள்ள முடியும் என்பதால் கவனத்துடன் பிழையை திருத்துங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளவும்...

Dr. அ.முகமது சித்திவ் M.B.B.S
S/O அ.அகமது கனி
93608 32545

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments