மக்களை வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!அறந்தாங்கியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமான மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டிக்கும் விதமாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களும்,  உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் தமுமுக, மமக, சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட, நகர, கிளை தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்களும்  மற்றும் சிஐடியு தொழிற்சங்க தோழர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments