புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி தகவல்


புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள்  இயக்கப்படும் இடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.  நகர பேருந்துகள்  இயக்கப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அவர், அதிகாரிகளிடம் போக்குவரத்து செயல்படுகள் குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டையில் பேருந்துகள் என்பதற்கான போதுமான இடவசதி உள்ளதாகவும், பேருந்து வசதியில்லாத அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் புதுக்கோட்டையை பாராளுமன்ற தொகுதியாக மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா,  நகராட்சி பொறியாளர் ஜீவ சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments