அரசர்குளம் தென்பாதி இறகுப்பந்து உள்விளையாட்டரங்கைபுனரமைத்து தர வேண்டுடி அமைச்சரிடம் அரசர்குளம் இளைஞர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு


அரசர்குளம் தென்பாதி இறகுப்பந்து உள்விளையாட்டரங்கைபுனரமைத்து தர வேண்டுடி மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ வீ மெய்யநாதன் MCAMLA , அவர்களை அரசர்குளம் இளைஞர்கள்  நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில்

அரசர்குளம் தென்பாதி ஊராட்சிக்குட்பட்ட , அரசர்குளம் பேட்டை (சின்ன பள்ளிவாசல் அருகில்) ஊரக தன்னிறைவு திட்டத்தின் கீழ் (2014-2015) இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது , சுற்றுவட்டாரத்தில் பல இறகுப்பந்து விளையாட்டு வீரர்கள் இவ்விளையாட்டு அரங்கின் மூலம் பயிற்சி பெற்று மாவட்ட ,மாநில அளவில் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளா இவ்விளையாட்டரங்கம் முறையான பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் சிதிலமடைந்து வருகிறது.

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் இவ்விளையாட்டரங்ககை புனரமைத்தை , கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தி தரும்படி, அரசர்குளம் வெல்ஃபேர் பவுண்டேசன் மூலமாகவும் மற்றும் அரசர்குளம் இளைஞர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் இப்பகுதியை சேர்ந்த மேலும் கூடுதலான வீரர்கள் பயிற்சி பெற்று மாநில ,தேசிய அளவிலான போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்க்க முடியும் என்பதையும் அமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.

செய்யவேண்டிய புனரமைப்புப்பணிகள் மற்றும் அடிப்படை கூடுதல் வசதிகள்

1. உட்புற மற்றும் வெளிப்புற த்திற்கு பெயிண்ட் அடிப்பது.

2. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி.

3. கூடுதல் மின் விளக்குகள்.

4. பேட்டரி அல்லது சோலார் மின் இணைப்பு வசதி .(அல்லது பேட்டரி இன்வெர்ட்டர் வசதி

5. வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர இருக்கைகள்(30)

6. விளையாடும் தரைதளம் மேம்படுத்தி கட்டமைப்பு செய்து தரப்பட வேண்டும்.

7. கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் விரைவில் விளையாட்டு அரங்கை பார்வையிட்டு, மேம்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி செல்வம், அரசர்குளம் தென்பாதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்
 திரு சாதிக் மற்றும் இறகு பந்து 
விளையாட்டு வீரர்கள், அரசர்குளம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பு: கடந்த முறை மாண்புமிகு அமைச்சர் ஆய்வு பணிக்காக அரசர்குளம் தென்பாதி பகுதிக்கு வந்திருந்த போது, 

அரசர்குளம் இளைஞர்கள் சார்பில் , அரசர்குளம் தென்பாதி ஊராட்சிக்கு 

1.பொது விளையாட்டு மைதானம்(2-3ஏக்கரில்) அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் அமைத்துதர வேண்டும்.

2. உடற்பயிற்சிக்கூடதுடன் இணைந்த சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும். என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

(ஊராட்சி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்தால் , இரண்டு கோரிக்கைகளையும் அமைத்து தருவதாக உறுதி அளித்து உள்ளார்கள்).


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments