கோபாலப்பட்டிணத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகை!கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், இரண்டு மாதங்கள் கழித்து கோபாலப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து 5.07.2021 முதல் தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு மாதத்திற்கு பிறகு கோபாலப்பட்டிணத்தில் பள்ளிவாசல்களில் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தொழுகை நடைபெற்றது.


புகைப்பட உதவி: சுல்தான் அப்துல் காதர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments