கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள்!!



கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மிகுந்த ஆர்வத்துடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 29.07.2021 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணிவரை கொரோனா இலவச தடுப்பூசி (கோவிஷீல்டு) முகாம் கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை ஜமாத்தலைவர் A.S.M.செய்யது முகமது தொடங்கி வைத்தார்.முகாமில் மருத்துவர் ராமசந்திர துரை தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். ஜமாத்துணைத் தலைவர் M.K.R.முகமது மீராசா மற்றும் ஜமாத் செயலாளர் ராஜா முகமது உடன் இருந்தனர்.

பொதுமக்கள் காலை முதல் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் 120-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 187 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதில் மூன்று கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் ஐந்து பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை Dr.அ.முகமது சித்திவ் M.B.B.S செய்திருந்தார்.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரூபினா கனி என்ற பெண்மணி கூறுகையில்,

தடுப்பூசி செலுத்தி கொண்ட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரூபினா கனி என்ற பெண்மணி கூறுகையில், கொரோனா நோய் நம்மைத் தாக்காமல் இருக்க, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று டாக்டர்களும் அரசும் கூறுகிறது. எனவே இதனை நாம் கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த Dr. அ.முகமது சித்திவ் கூறியாதவது:

இணை நோய் உள்ளவர்கள் (கடந்த ஓராண்டில் இதய நோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் உள்ளவர்கள் ஆகியன உள்ளவர்கள் இணை நோய்கள் உடையவர்களாக கூறப்பட்டுள்ளது.), 

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் அனைவரும் ஒன்றிய அரசு மற்றும் AIIMS மருத்துவமனை அறிவிப்பின் படி மூன்றாவது அலை அடுத்த மாதம் இடைப்பகுதியில் தொடங்க இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மூன்றாம் அலையில் இருந்து தங்களையும், தங்கள் வீட்டாரையும், ஊரையும், நாட்டையும் கொரோனாவிலிருந்து மீட்டு கொரோனா இல்லாத நாடக மாற்ற அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.ஊர் மக்களின் ஒத்துழைப்புக்கு பாரட்டுத் தெரிவித்தார்.

மேலும் கொரனோ தடுப்பூசி முகாமை பற்றிய செய்தியை கோபாலப்பட்டிணம் மக்களிடம் கொண்டு சேர்த்த GPM மீடியாவிற்கு நன்றியை தெரி வித்து கொண்டார்.

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள Gpm மீடியா சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோம்! கொரோனா இல்லாத இந்தியாவை படைப்போம்!!









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments