புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், துணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்கள் மருந்தாளுநர்-15, பட்டயபடிப்பு (டி.பாம்) 2 ஆண்டுகள் முடித்தவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சாந்தநாதபுரம் 6-ம் வீதி, புதுக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி ஆகும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேர்முக தேர்வு 9-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். நேர்முக தேர்வு நடைபெறும் இடம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் (புதிய கட்டிடம், மாவட்ட நீதிமன்றம் எதிரில்) புதுக்கோட்டை. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments