மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்!!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை, உணவு பாதுகாப்பு துறை, ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மீமிசல் பகுதியில் உள்ள ஐக்கிய வர்த்தக சங்கம் தலைவர் அபுபக்கர், செயலாளர் வன்மீக நாதன்,பொருளாளர் சீனிவாசன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜேம்ஸ், அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் துரை ராமச்சந்திரன் மற்றும் பொது மருத்துவர். கெளதம், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீமிசல் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments