விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கீரனூர் காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி காவல்துறையினர்


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கீரனூர் காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி காவல்துறையினர்.

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.லதா அவர்கள்  மற்றும் அறந்தாங்கி காவல்துறையினர்

   
ஆகியோர்கள்  21.07.2021ம் தேதியன்று கீரனூர் எல்லைக்குட்பட்ட பையூர் கிராமம் மற்றும் அறந்தாங்கி எல்லைக்குட்பட்ட ஆளபிறந்தான் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும், அவற்றை தொடர்பு கொள்ள 181 & 112 கட்டணமில்லாத தொலைப்பேசி எண் குறித்தும்   விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments