பொன்னமராவதியில் அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைப்பு கண்டக்டர்-டிரைவருக்கு பாராட்டு

    
அரசு பஸ்சில் தவறவிட்ட நகை-பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், நேற்று கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பஸ்சில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார்.

 மேலும் இவர் கையில் வைத்திருந்த பையில் 9½ பவுன் தங்க சங்கிலி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ரூ.2 ஆயிரம், டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை பஸ்சில் தவற விட்டுள்ளார். பஸ்சில் விட்டு இறங்கிய மகாலட்சுமி தன் கையிலிருந்த பையை தேடியபோது, பஸ்சில் தவற விட்டது தெரியவந்தது. உடனடியாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 இந்தநிலையில் பொன்னமராவதி வந்தடைந்த அரசு பஸ்சில் கிடந்த பையை டிரைவர் தவச்செல்வம், கண்டக்டர் மனோகரன் ஆகிய இருவரும் போக்குவரத்து பணிமனையில் உள்ள பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் ஒப்படைத்துள்ளளர். கருப்பையா உரிய விசாரணை செய்து பையை தவறவிட்ட மகாலட்சுமியை வரவழைத்து நகை-பணத்தை ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயலை கிளை மேலாளர், சக கண்டக்டர், டிரைவர்கள் வெகுவாக பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments