குவைத்தில் இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வந்த தமுமுக மமக-வினர்


நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த சுடலை முத்து இவரது மகன் மீகா வயது 24  இளைஞரான இவர் குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 22.07.2021 அன்று குவைத்தில் மரணமடைந்தார்.

உடலை தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் தமுமுக மமக தலைமையை தொடர்பு கொண்டனர். தமுமுக மமக தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி தமுமுக-வின் வெளிநாட்டு பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் குவைத் மண்டல தலைவர் ஜபருல்லா அவர்களின் தலைமையில் குவைத் மண்டல துணை தலைவர் சகோதரர் வசீம் அவர்கள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் செய்து‌ மரணமடைந்த இளைஞர் மீகாவின் உடலை தாயகம் அனுப்பி வைத்தார். 

இதற்கான பணிகளை மண்டல  தலைவர் ஜபருல்லா, துணை தலைவர் வசீம் மற்றும் செயலாளர்கள கமர்தீன், முஜீப், மைதீன், காசீம் உள்ளிட்ட குவைத் நிர்வாகிகள் செய்தனர்.

28/7/21 விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த உடலை தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் ஜாவித், ஏர்வாடி பேரூர் கிளை தலைவர் அன்வர் துணை தலைவர் சபீக் துலுக்கர்பட்டி கிளை இளைஞர் அணி கான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் மற்றும் மரணமடைந்த மீகாவின் தந்தை சுடலைமுத்து, ஆதிநாரயணன் ஆகியோர் நேற்று நள்ளிரவு திருவனந்தபுரம் சென்று தமுமுக ஆம்புலன்ஸில் உடலை எடுத்து‌ வந்து, அவரது ஊரில் நல்லடக்கம் செய்தனர்.

இந்த பணியை மிகுந்த சிரமத்திற்கு ‌மத்தியில் விரைவாக செய்து உடலை பெற்று தந்த குவைத் மற்றும் ‌மாநில மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகளுக்கு  மரணமடைந்த மீகாவின் குடும்பத்தினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நெஞ்சார கண்ணிர் மல்க நன்றி தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments