மலேசியாவில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள் மீட்பு :


மலேசியாவில் தவித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடபாலம், ஆலங்குடி, மூர்க்கம்பட்டி, ஒரத்தநாடு ஆகிய கிராமங்களில் இருந்து 9 இளைஞர்கள் முகவர்கள் மூலம் 2020-ல் வேலைக்காக மலேசியா சென்றனர். அங்கு தகுதி அடிப்படையில் வேலை கொடுக்காமல் தோட்டங்களில் வேலை செய்ய வைத்தனர். இருப்பிடம், உணவு வசதி செய்து தராததால் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இவர்கள் மீது பொய் வழக்கு போட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.

இதை அறிந்த மலேசியாவில் செயல்படும் உலக மனித நேயம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமலநாதன், மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளையின் மீட்பு அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தார். இரு அமைப்பினரும், இவர்களை மீட்க இரு நாட்டு தூதரகங்களை அணுகினர். வழக்குகளில் வாதிட்டு 9 இளைஞர்களுக்கும் பணப் பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து 9 இளைஞர்களும் நேற்று முன் தினம் காலை 9 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்ததாக மதுரை தானம் அறக்கட்டளையின் மீட்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஏ.ரமேஷ் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments