கோபாலப்பட்டிணத்தில் வெறி நாய்களின் தொல்லை அதிகரிப்பு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!கோபாலப்பட்டிணத்தில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் வெறிநாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சமீப காலமாக அதிகளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் தெருவில் செல்வோரை கடிப்பதும், விரட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுகுளம் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த கோபாலப்பட்டிணம் 7-வது வார்டு பகுதியை சேர்ந்த ஹைதர் அலி (61) என்பவரை நாய் கடித்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறிநாய்கள் கடிக்கும் போது ரேபிஸ் என்ற வைரஸ் கிருமி மனித உடலுக்குள் செல்கிறது. இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளின் விலை அதிகம் என்பதால் வசதியில்லாதவர்கள் பலர் உரிய சிகிச்சை மேற்கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லை. ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.

முன்பெல்லாம் ஊராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோபாலப்பட்டினம் பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களின் தொல்லையை ஒழிக்க ஊராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெறிநாய்கள் ஜாக்கிரதை!

கோபாலப்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக நடமாடுவதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடவோ அல்லது தனியாக எங்கேயும் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் இதுவரை பல சிறுவர்களை கண்டித்துள்ளது.
தெருவில் யாரை கடிப்பது என்ற யோசனையில் அமர்ந்திருக்கும் தெரு நாய்!


தெருக்களில் கூட்டமாக திரியும் நாய்கள்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments