பனை மரங்களை பாதுகாக்க கோரி புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம், புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிப்பு






தமிழ்நாடு அரசு மரமான பனை மரங்களை பாதுகாக்க கோரி புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம், புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களை புன்னகை அறக்கட்டளையின்
கௌரவ தலைவர் ஜெகன்.ஜி நிறுவன தலைவர் கலைபிரபு, அறங்காவலர் அப்பாசாமி, மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு அரசு மரமான பனை மரங்களை பாதுகாக்க அரசு முன் வரவேண்டும், நிலத்தடி நீர்நிலைகளை பாதுகாக்கும் மரங்களை
வெட்ட அனுமதிக்க கூடாது,மற்றும் பாரம்பரிய மரங்களை வெட்டுவதற்கு
முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும்,
மற்றும் தமிழ்நாடு அரசு பனைமரங்களை
அதிக அளவில் நடுவதற்கு முன் வரவேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரங்களை அதிகளவில் நடும் பல சமுக நல அமைப்புக்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments