உஷாரய்யா உஷாரு..! அதிரை இளைஞருக்கு வாட்ஸ்ஆப்பில் ஜல்சா வீடியோ கால்! சைபர் கிரைமில் புகார் !!இணைய பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறி இப்போது இணையத்தை கொண்டே ஒருவரை எப்படி வீழ்த்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விதவிதமான திருட்டுகளும், துரோகங்களும் இந்த இணைய தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் முன்பின் அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் வருகிறது. இதனை அட்டன் செய்யும் இளைஞர்களை மயக்கும் விதமாக மறுமுனையில் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கும் பெண் காம வலை வீசுகிறாள்.
 
இதனால் மயங்கும் இவன் அவளின் கட்டளை பிரகாரம் ஆக வேண்டியதை எல்லாம் செய்து முடிக்கிறான்.

மேட்டர் ஓவர் ஆனவுடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

சற்று நேரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு கால் ஒன்று வருகிறது, அதனை அட்டன் செய்யும் அந்த சல்லாப வாலிபருக்கு மறுமுனையில் பேசும் நபரால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கபடுகிறது.

அதில் நான் கேட்கும் தொகையை குறிப்பிட்ட ஜீ பே மூலமாக எனக்கு அனுப்ப வேண்டும் இல்லையேல் சற்றுமுன் நீ நிர்வாண கோலத்தில் மங்கையுடன் பேசிய சல்லாப ஜல்சா வீடியோவை உனது ஊர் சார்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மிரட்டபடுகிறார்.
 
நான் கூறுவதில் சந்தேகமிருந்தால் மீண்டும் ஆன்லைன் வா உன்னோட போன் காண்டெக்ட் லிஸ்ட்டை அனுப்பி வைக்கிறேன் என மிரட்டுகிறான்.

அதன்படி ஆன்லைன் சென்ற ஜல்சா பார்ட்டி ஒருவன் அதிர்ச்சியில் உறைந்து இறுதியாக சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளான்.

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments