கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் ஆண்கள் படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் படித்துறையில் உள்ள பாசிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக (2015-2018) போதிய மழை இல்லாமல் குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது. கடந்த 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகள் பெய்த மழையால் மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுக்குளம் நிரம்பியது.

இந்நிலையில் சமீப காலமாக கடும் வெயில் காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் தற்போது படித்துறைகளில் பாசி படிந்து வருகிறது. குளிக்க வருபவர்கள் மற்றும் இரவு நேரத்தில் கால் கழுபவர்கள் வழிக்கி விலுகின்றனர். மேலும் வயதனாவர்கள், சிறியவர்கள் மிகவும் சீரமப்படுகின்றனர். 

எனவே ஊராட்சி நிர்வாகம் படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அகற்றி கரடுமுரடாக உள்ள படித்துறையை சேதமடைந்துள்ள படிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments