கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜமாஅத் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜமாஅத் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோபாலப்பட்டிணம் ஜும்ஆ பள்ளிவாசலில்  ஜமாஅத் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்பட்டது.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள  கோபாலப்பட்டிணம் மக்கா தெருவில் உள்ள  ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில்  கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தார்கள் ,


கோபாலப்பட்டிணம் ஜமாஅத் தலைவர் ASM முகமது சேனா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,.

இந்த விழாவில் 
கோபாலப்பட்டிணம்  ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள்   என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments