கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் புதிய மோட்டார் பம்பு வைப்பு
கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் புதிய மோட்டார் பம்பு வைப்பு

கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் புதிய மோட்டார் பம்பு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் போர் செயல்பட்டு வருகிறது. இந்த போர் தண்ணீர் மூலம் கோபாலப்பட்டிணம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அடிக்கடி பழுதடைந்து தண்ணீர் பிரச்சினை வருவதால்
மக்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க போர்கால அடிப்படையில்
ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் அரசு மேல்நிலை பள்ளி அருகே 14.08.2021 சனிக்கிழமை ஊராட்சி இருப்பு தொகையில் இருந்து புதிய மோட்டார் பம்பு வைக்கப்பட்டது.
இன்னும் நமது ஊராட்சியில் அவ்வப்போது வரக்கூடிய அனைத்து அடிப்படை தேவைகளையும் துரிதமாக செய்து தர வேண்டியும் சிறந்த ஊராட்சியாக திகழ்ந்திடவும் வாழ்த்துகிறது GPM மீடியா.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments