கோரிக்கைகளை வலியுறுத்திஅரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் அறிவிக்கப்படாததால் அதனை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபரூல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் பழனிசாமி உள்பட துறைவாரிய சங்கத்தினர், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்
27 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை உடனடியாக வழங்கிட வேண்டும், பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,  4 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments